அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை முடித்த 1வது இலங்கையர்!


இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பேட்ஜ் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

14 மாதங்கள் நீடித்த இந்த கடுமையான பயிற்சி, உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதில் 75 வீதத்துக்கும் அதிகமானோர் பயிற்சியிலிருந்து இடையில் விலகிச் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.