கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலை மாணவன் மாயம்!
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் நேற்று காணாமல் போயுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவென்று நேற்று காலை கடலில் ஸ்நோர்கெல் அணிந்து கடலின் அடிப்பகுதியைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, மாணவர்களில் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் அணிந்திருந்த ஸ்நோர்கெல் பின்னர் உயிர்காப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போனவர் கம்பஹா, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் ஆவார்.
கொழும்பு துறைமுக பொலிசார், கடற்படை பிரிவு டைவர்ஸ் மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் ஆகியோர் இணைந்து காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் கொழும்பு துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி