நாட்டில் உச்சம் தொட்ட போதைபொருள் பாவனை ; ஊசி மூலம் போதை ஏற்றிய ஒருவர் உயிரிழப்பு!
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 28 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி