ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக இன்று முதல் விசேட ரயில் சேவை


இன்று முதல் (18) ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பயணத்திற்காக 13 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த விசேட ரயில் சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு இயக்கப்படும்.

அதன்படி, இந்த விசேட ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி, கம்பளை மற்றும் கடுகண்ணாவை ஆகிய இடங்களிலிருந்து கண்டி வரை இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை, கம்பளை மற்றும் கடுகண்ணாவை ரயில் சேவைகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் பதுளைக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்களுக்கு மேலதிகமாக, ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக இந்த விசேட ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.