க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
நடைமுறை சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகளை 20ஆம் திகதிக்கு பின்னரே வெளியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுட்டிக்காட்டி செய்திகளும் வெளியாகியுள்ளன. இதேவேளை, சுமார் 331,185 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
