தேர்தலுக்காக ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் அச்சீடு!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,72,96,330 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் சகல வாக்குச்சீட்டுகளும்  விநியோகிக்கப்படுமெனவும்  தெரிவித்துள்ளது.