பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!


பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் காரணாமாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடிய நிலை உள்ளதனால், 

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.