தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்களுக்கான விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற வேண்டியவர்களுக்கு தபால் திணைக்களம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள், பணி நேரங்களில் தங்கள் உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அடையாளத்தை நிரூபித்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் நடைபெறும் நாளன்று மாலை 4.00 மணி வரை இது அமுலில் இருக்கும்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16 அன்று தொடங்கி ஏப்ரல் 29 அன்று நிறைவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி