கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் பலி!
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தின் முன் கதவிலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஹபரண - திருகோணமலை வீதியின் ஹபரண பகுதியில் இந்த விபத்து நடந்தது. இதில் போதிவெல, ரிக்கில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். அவர் ஹபரணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபரணை பொலிஸார் நிலைமை குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி