லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் புதிய 3,990 ரூபாயாகும்.
இதன்படி, 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய 1,602 ரூபாயாகும்.
2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 750 ரூபாவாகும்.
Tags:
இலங்கை செய்தி
