இந்திய கரையை வந்தடைந்தது முரசு சூறாவளி: மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முரசு சூறாவளி இந்திய நிலப்பரப்பை அடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து வட-வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (03) காலை 11:30 மணியளவில் சுழல் காற்றாகவும், நள்ளிரவு 11:30 மணியளவில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக குறையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில வேளைகளில் மணிக்கு 65 - 75 கி.மீ வரை அதிகரிக்க கூடும். பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
எனவே கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
