மாங்குளத்தில் கோர விபத்து: பாலத்தில் மோதிய கார் - 3 பேர் படுகாயம்

மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் 15-ம் கட்டை பகுதியில் கார் ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்தவர்கள் மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வழிபாடு முடித்துவிட்டு, இன்று (03) அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

15-ம் கிலோமீட்டர் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் பலமாக மோதியது. காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிரைவருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.