முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர் படத்தில் ஹீரோவாக களமிறங்கு ஜேசன் சஞ்சய்!
தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெயர் ஜேசன் சஞ்சய். நடிகர் விஜய்யின் மகனான இவர், 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த நிலையில், தனது இரண்டாவது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா வட்டாரங்களில் கூறப்படுவதாவது, விஜய்யை தனது அண்ணனாக கருதும் இயக்குநர் அட்லீ, ஜேசன் சஞ்சய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை 'டூட்' பட புகழ் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
சினிமா
.png)