மெரினா கடற்கரைக்கு போக வேண்டாம்- வேலையை காட்டும் முரசு புயல்! சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு ஆந்திராவை நெருங்கி வரும் "முரசு" அதிதீவிர புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என INCOIS எச்சரித்துள்ளது.

கடல் அலைகள் 1.4 மீட்டர் முதல் 2.1 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னையில் கடந்த 21 மணி நேரத்தில் மட்டும் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரை மற்றும் திருவள்ளூர் பழவேற்காடு கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.