2027-ல் சனி ஆட்டம் ஆரம்பம்! ஏழரைச் சனியில் சிக்கப்போகும் இந்த 3 ராசிகள்!


ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் நிலைகளும் அவற்றின் மாற்றங்களும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில், நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நன்மைகளையும் சவால்களையும் வழங்குபவர் சனி பகவான் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கிப் பயணிப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டில் சனி பகவானின் பெயர்ச்சி தொடர்பாகப் பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். சனி பகவானின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் தாக்கத்தை கொடுக்க காத்திருக்கின்றது. 

அப்படி, 2027 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் தாக்கத்தை அனுபவிக்கப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம். 


ரிஷபம்

2027 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. இதனால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படாமல் கவனமாகச் செயல்படுவது அவசியம்.

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போதும், பழகும்போதும் பொறுமையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப்பிடிப்பதால் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். 

தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் உங்களுக்குரிய பொறுப்புகளை உணர்ந்து, அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்படுவதால் முன்னேற்றம் அமையலாம். 

எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்காமல், திட்டமிட்டு முன்னேறினால் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கிக்கொள்லாம். 


கும்பம்

2027 ஆம் ஆண்டில் சனி பகவானின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் அதிக ஒழுக்கத்துடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும். இல்லையேல் சனியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். 

எந்தவொரு முக்கியமான முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல், அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. பணியிடத்தில் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவதுடன், தேவையற்ற பிரச்சனைகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், ஆரோக்கியத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டாமல், முறையான ஓய்வையும் அன்றாடப் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்தால் சவால்களைச் சமாளித்து முன்னேற உதவியாக இருக்கும்.


மீனம்

2027 ஆம் ஆண்டில் ஏழரைச் சனியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்கள் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டியிருக்கும்.

குறிப்பாக, குடும்ப உறவுகளில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது இனிமையாகவும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்வது நல்லது.

எந்தவொரு முக்கியமான முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல், அதன் சாதக பாதகங்களை நிதானமாகச் சிந்தித்த பிறகு முடிவெடுக்க வேண்டும்.

வாழ்க்கையில் எதிர்படும் சூழ்நிலைகளைப் பொறுமையுடன் அணுகி, உங்களுக்கான பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள். அவசர முடிவுகளைத் தவிர்த்து, நிதானமாகவும் திட்டமிடுவது அவசியம்.